கேஸ் மற்றும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
இந்திய மாதர் தேசிய சமேலனம் சார்பில் கேஸ் மற்றும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு அருகே மாவட்ட தலைவர் பார்வதி தலமையில் போராட்டம் நடைபெற்றது இதில் பெண்கள் கேஸ் சிலிண்டர் முன்பு ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.இப்போராட்டத்தில் NIFW திருச்சி மாவட்ட தலைவர்பார்வதி பேசுகையில் நாட்டில் வாழும் அடித்தட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகளான பருப்பு,பெட்ரோல்,டீசல் குழந்தைகளுக்கான பால் விலை என அனைத்தும் உயர்ந்தால் அடித்தட்டு மக்கள் எப்படி வாழ்வது என்று மத்திய அரசை கண்டித்து குரல் எழுப்பினார்.