குளியலறையில் தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை!
திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 49), கட்டட தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.