வருகிற 23ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

0 328
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 23ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் திருச்சி மேற்கு வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் திருச்சி மேற்கு வட்டத்திற்குட்பட்ட

 

எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் திருச்சி மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பொதுமக்கள் பயனடையலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.