எலி மருந்தை தின்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு!
திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 48). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 25.04.2022 தேதி காலை எலி மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து துறையூரில்
சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.