பணியிட மாறுதல் கலந்தாய்வு

0 361
Stalin trichy visit

தொடக்க, நடுநிலைபள்ளிகளில் இருந்து அங்கன்வாடி மைய எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு மற்றும் மாணவர்கள் குறைந்த பள்ளிகளில் இருந்து எடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் நிரப்பும் பணியிட மாறுதல் கலந்தாய்வு திருச்சியில் நடைபெற்றது. திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் நடந்த இந்த கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்கள் வெளியேறிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வருகை தந்தனர்.

இதற்கான சீனியாரிட்டி முன்னுரிமை பட்டியல் தயாரித்து ஆன்லைன் மூலம் தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பினர். இதில் 45 ஆசிரியர்களுக்கு தங்களது ஒன்றியத்துக்கு பணி மாறுதல் பெற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்தபடி பணி நிரவல் கிடைக்காமல் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.