தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

0 348
Stalin trichy visit

தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு செப்டம்பர் மாதம் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 11ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தனித்தேர்வர்கள் நேரடியாக வந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வருகிற 11ம் தேதி நேரில் வந்து தேர்வுக்கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் புகைப்படம் எடுக்கப்பட்ட உள்ளதால் தேர்வர்கள் நேரில் வரும் பட்சத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறும் தேர்வர்களுக்கு 12ம் தேதி கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.50, முதல் மற்றும் 2-ம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் பெற ரூ.100, பதிவு மற்றும் சேவை கட்டணமாக ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.