திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த துவாக்குடி பெல்நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் கரிகாலன்(வயது 28). மேலும் இவர் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்
அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத போது மதுவில் அரளி விதையை அரைத்துக் கலந்து குடித்துள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது. மேலும் இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு
அவரை கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அவர் உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடையவே அவர் விஷம் அருந்தி இருப்பார் என்றும் கூறப்படுகிறது.