பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி…..

0 408
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிவிடையில் பைக்கில் சென்ற இளைஞர் தவறி விழுந்து படுகாயமடைந்ததில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.

லால்குடி அருகே மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன். இவரது மகன் 24 வயதான விக்னேஷ். இவர் கடந்த 27ம் தேதி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே பள்ளிவிடையில் சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.