கோழி கூண்டுக்குள் புகுந்த நல்லபாம்பு……..
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணமேடு கிராமத்தில் கோழி கூண்டுக்குள் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு மார்ச் 2 ந்தேதி புகுந்தது. லால்குடி தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகமீட்டனர்.

திருமணமேடு புது தெருவில் வசிப்பவர் விஜய். இவரின் வீட்டுக்கு அருகே கோழி கூண்டு அமைத்துள்ளனர். அந்த கோழிக்கூண்டுக்குள் கடந்த 3 நாட்களாக நல்லபாம்பு புகுந்து பதுங்கிக் கொண்டது. பாம்பை விரட்ட செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தது. பாம்பு கூண்டுக்குள் அடியில் புகுந்து ஒளிந்து கொண்டது. இந்நிலையில் திருமணமேடு திமுக பிரமுகர் பகவதிமணி லால்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த லால்குடி தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் அங்கு உள்ள வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்