கோழி கறி சாப்பிட்ட இளம் பெண் பலி

0 487
Stalin trichy visit

திருச்சி, ஜன.17 கோழி கறி சாப்பிட்ட இளம் பெண் பலியாகியுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலம் தஸ்தின் தினாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் குர்குரு சுரைன்.இவரது மகள் கோனிகா (19). இவர் திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணியில் உறவினர்களுடன் ஈடுபட்டு வந்தார். மேலும் கோனிகா உள்ளிட்ட தொழிலாளர்கள் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் கோனிகா கோழிக்கறி சாப்பிட்டுள்ளார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து கே.சாத்தனூர் கிராம நிர்வாக அதிகாரி குமாரவேல் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கோனிகா ஓட்டலில் சிக்கன் கறி வாங்கி சாப்பிட்டாரா அல்லது வீட்டுக்கு கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டாரா என்பது விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.