வெங்கங்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடியில் செலவுக்கு பணம் தரததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி சுப்பிரமணிய காலனி தெருவை சேர்ந்தவர் ரகுபதி(26). இவர் தன் தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.பணம் தர தாய் மறுக்கவே மனமுடைந்த வாலிபர் 27 ம் தேதி மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார். இது குறித்து தகவல அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.