இன்னும் ஒரு மாதத்தில் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் ! – அமைச்சர் கே.என். நேரு தகவல்

0 251
Stalin trichy visit

திருச்சி கருமண்டபம் பகுதியில் குருநாத் தோற்று நோய் அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்வில் தொடக்கவிழா நடைபெற்றது இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு பேசும்போது திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன திருச்சி அரசு மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன மேலும், மணப்பாறை துறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே என் நேரு நமக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டும்தான் இருக்கிறது. ஆக்சிசன் உற்பத்தி செய்வது தொடர்பாக பெல் நிறுவனத்தில் கேட்ட போது நாங்களே வெளியில் இருந்துதான் ஆக்சிஜன் வாங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்கள் நாங்கள் உடனே நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவது ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தோம் ஆக்சிஜனை உற்பத்தி பணிகள் நடந்து வருகின்றன இன்னும் ஒரு மாதத்தில் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்தார்

 

Leave A Reply

Your email address will not be published.