ஊரடங்கில் விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டாத போலீசார் !

0 785
Stalin trichy visit

கொரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்க கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கானது அமலில் உள்ளநிலையில் கொரோனா தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

 

திருச்சி மாநகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுக்கவும் அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவை தீவிரமாக செயல்படுத்தப்படும் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் 919 போலீஸார் நியமிக்கப்பட்டு தீவிர வாகன கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர்.

 திருச்சி மாநகரில் 50 இடங்களில் தற்காலிக வாகன சோதனை செய்யும் முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு  24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

உரிய காரணங்கள் இன்றி சரியானஆவணங்கள் இல்லாமல்  சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை  எச்சரிப்பதுடன் ரூபாய் 200 அபராதம் விதிக்கின்றனர். மருத்துவமனை மற்றும் மருந்துகளுக்கு செல்லும் நபர்கள் உரிய ஆதாரங்களை காண்பித்தால் அவர்ளை செல்ல அனுமதிக்கின்றனர்.

போலீசார் வாகன ஓட்டிகளிடம் அதிக கெடுபிடி காட்டாமலும் கனிவாக விசாரிக்கின்றனர். திருச்சி மாநகரம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

திருச்சி மாநகரம் மட்டுமின்றி  மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் திருச்சி ஜங்ஷன்,

தில்லை நகர், மேலப்புதூர் பாலக்கரை, உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.