உடையான்பட்டியில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

0 814
Stalin trichy visit

திருச்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் குண்டு குழிகளில் மற்றும் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 38 வார்டு புதிய சிந்தாமணி நகர், உடையான்பட்டி பகுதியில் போதிய வடிகாலின்றி தேங்கிய மழை நீரால் பொதுமக்களும், பாதசாரிகளும் , வாகன ஒட்டிகளும் பெரும் அவதியுள்ளார்கள். மழை நீர் சென்று கொண்டு இருந்த இடத்தில் புதிய ரோடு உயரமாக அமைத்து மழை நீர் செல்ல வழி இல்லாத காரணத்தினால் குளமாக காட்சி அளிக்கிறது.

 

இப்பகுதியில் மழை நீர் செல்ல வடிகாலும், சாலைகள் அமைத்து  தருமாறு மக்கள் சக்தி இயக்க  சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர் . மேலும் உடனடியாக மாநகராட்சி இந்த இடத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது

Leave A Reply

Your email address will not be published.