தொட்டியம் அருகே குட்கா சோதனை என்ற பெயரில் நூதன முறையில் 4 பவுன் நகை திருட்டு

0 457
Stalin trichy visit

திருச்சி தொட்டியம் பழைய சேலம் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(52) இவர் பவளக் கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

 

இவரது கடைக்கு அதிகாரி போல் வந்த ஒருவர் குட்கா சோதனைக்கு வந்துள்ளேன் எனக்கூறி கடையை சோதனை செய்துள்ளார் – மேலும் உங்களது வீட்டையும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து வீட்டிற்கும் பாலகிருஷ்ணன் அழைத்துச் சென்றுள்ளார்,அங்கு வீட்டின் பீரோவில் சோதனை செய்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகையை எடுத்து விட்டு பேச்சுக்கொடுத்து கொண்டே தப்பி சென்றுள்ளார்,அவர் பரபரப்பாய் சென்றவுடன் பீரோவை மீண்டும் பூட்ட சென்ற பாலகிருஷ்ணன் அதில் வைக்கப்பட்டுள்ள நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் –  இதுகுறித்து தொட்டியம் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார்.
பெட்டிக்கடை வைத்து பிழைத்து வரும் நபரிடம் நாடகமாடி   நான்கு பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave A Reply

Your email address will not be published.