மண்ணச்சநல்லூரில் ஊரடங்கை மீறி சுற்றுபவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்த காவல்துறையினர்

0 198
Stalin trichy visit

மண்ணச்சநல்லூர் நகரப்பகுதியில் தேவையின்றி சுற்றுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள்,இளைஞர்கள் தேவையின்றி வெளியே சுற்றி திரிபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமரா மூலம் மண்ணச்சநல்லூர் போலீசார் கண்காணித்தனர்.கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும்,வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு மே 10 ந்தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.இந்நிலையில் தேவையின்றி வெளியே நடமாடும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் மணச்சநல்லூர் நகரப் பகுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் தேவையின்றி ஊர்சுற்றும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை கண்காணிக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.