காட்டூர் அருகே பாதாள சாக்கடை பணியின் போது தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு
திருச்சி காட்டூர் அருகே பாதாள சாக்கடை பணியின் போது தவறி விழுந்த கட்டிட தொழிலாளரை உடனடியாக மீட்ட கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர் ….திருச்சி காட்டூரை அடுத்த கைலாஷ் நகரில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த பல வாரங்களாக நடைபெற்று விடுகிறது.இந்நிலையில் பாதாள சாக்கடை தோன்றும் போது பணியில் இருந்த மேஸ்த்திரி கைலாசம் (வயது 50 )சுமார் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்,இதனை அடுத்து செய்வதறியாது திகைத்த மற்ற பணியாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர் உடனடியாக கைலாசத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தகவல் கொடுத்த சில மணித்துளிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து பள்ளத்தில் விழுந்த அவரை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.