ஆக்சிஜன் தயாரிப்பு குறித்து பெல் பொதுமேலாளருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு – அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை
கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் பெல் நிறுவனத்தில் ஏற்கெனவே ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் நகர்புற வளர்ச்சி அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பாரத மிகுமின் நிறுவன பொது மேலாளரை சந்தித்து ஆக்சிஜன் மீண்டும் உற்பத்தி செய்வதற்கு குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் உடனிருந்தனர்.