கொரோனா பாதிப்பால் திருச்சி மண்டலத்தில் ஒரே நாளில் 26 பேர் பலி
கொரோனாவின் இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே மத்திய மண்டலமான திருச்சி, கரூர், புதுகை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே நாளில் 3003 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தஞ்சையில் 897 பேருக்கு தொற்று உறுதியானது. 428 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் 2941 பேர் சிகிச்சையில் உள்ளனர்.திருச்சியில் 813 பேருக்கு தொற்று உறுதியானது. 625 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,385 பேர் சிகிச்சையில் உள்ளனர். திருவாரூரில் 302 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 271 பேர் குணமடைந்துள்ளனர். 1626 பேர் சிகிச்கையில் உள்ளனர். கரூரில் 291 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 224 பேர் குணமடைந்துள்ளனர். 1711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகையில் 211 பேருக்கும், புதுகையில் 236 பேருக்கும், அரியலூரில் 112 பேருக்கம், பெரம்பலூரில் 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சியில் 10, தஞ்சையில் 7, நாகை 5, திருவாரூரில் 3, அரியலூரில் ஒருவர் என மொத்தம் 26 பேர் பலியா