திருச்சியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் அழிப்பு

0 711
Stalin trichy visit

திருச்சியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் அழிப்பு/ தற்போது மாம்பழ சீசன் என்பதால் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு பங்கனப்பள்ளி, மல்கோவா, இமாம்பசந்த், உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.அவ்வாறு கொண்டு வரப்படும் மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

 

இதனையடுத்து நியமன அதிகாரி ரமேஷ் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள்,  மாநகராட்சி ஊழியர்கள், காந்தி மார்க்கெட் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப் படுவது தெரிய வந்தது. இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட சுமார் 4 டன் மாம்பழங்கள் மற்றும்  பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரியமங்கலம் குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

இதுகுறித்து நியமன அதிகாரி ரமேஷ் கூறுகையில் இது போன்ற செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Leave A Reply

Your email address will not be published.