திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் – அமைச்சர்கள் கே.என்.நேரு – அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்

0 844
Stalin trichy visit

திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையில் ரூ.53 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் மருத்து சேவை பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு – அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.

 

மேலும் அம்மருத்துவமனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான குடல் இரைப்பை உள்நோக்குக் கருவிகளை மருத்துவப் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் அர்ப்பணித்தனர்.

மேலும் தனியார் நிறுவனமான கேப்ஜெமினி சார்பில் ரூ.18.75 மதிப்பிலான 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் சார்பில் சிப்காட் மூலமாக ரூ.12.50 லட்சம் மதிப்பில் 125 ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவனை டீன் வனிதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.