திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்க ஆய்வு – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு – நகர்ப்புறஅமைச்சர் கே.என்.நேரு பேட்டி.முதல்வர் அறிவுறுத்தலின்படிதிருச்சி பெல் ஆலையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து அங்கு ஆய்வு நடத்தப்படும் என்றார் மாநில நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கரோனா நிவாரண உதவித் தொகையின் முதல் தவணை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின் குமார், உள்ளிட்ட எம்எல்ஏக்கள் 7 பேர் . மாநகர காவல் ஆணையர் அருண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தைத் தொடக்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, “மக்கள் பாதிக்கப்படாத வகையில் கரோனர தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சித்த மருத்துவ முறையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி பெல் ஆலையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆய்வு செய்யுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில் அங்கு ஆய்வு நடத்தப்படும்” என்றார். கொரோணாவிற்கு எப்போது? தீர்வு கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே என் நேரு, பிரச்சினை எப்போது முடியும்? என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்றார். மேலும் காந்தி மார்க்கெட் ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு காந்தி மார்க்கெட் தற்போது மேலபுலிவார் சாலையின் இருபுறமும் கடைகள் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். சென்னையில் செயல்படும் War room போல திருச்சியிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கு யar room அமைக்கப்பட உள்ளது. ரெம்டெசிவர் மருந்தானது மத்திய அரசிடமிருந்து பெறுவது மிக குறைவாக இருப்பதால் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பெற மத்திய அரசுடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மருந்து தேவை கூடுதலாக உள்ள நிலையில் அதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார்.அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியபோது,தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதே? என்ற கேள்விக்கு பதிலளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுபோன்ற புகார்கள் பெற்றோர்களிடமிருந்து வந்துள்ளது. குறிப்பாக பள்ளி பேருந்துகள் அனைத்தும் ஒடாத நிலையில் , பேருந்து பள்ளி கட்டணம்,பள்ளி சீருடை கட்டணம் வசூலிப்பது என தொடர்ந்து வசூல் செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் விரைவில் அதுகுறித்து தனியார் பள்ளிகளோடு விரிவான விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதிபட தெரிவித்தார்.மேலும்பெல் ஆலையில் 1980-ல் ஆக்சிஜன் ஆலை நிறுவப்பட்டு 2016 வரை உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது. உதிரி பாகங்கள், துணைக் கருவிகள் கிடைக்காததால் மூடி வைத்துள்ளனர். புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவ என்ன செய்ய வேண்டும்? அரசிடமிருந்து என்னென்ன உதவிகள் வேண்டும்? என்று ஆலையின் நிர்வாக இயக்குநரிடம் கலந்து ஆலோசனை நடத்த உள்ளோம். கரோனா பணியில் தமிழ்நாட்டுக்கும், திருச்சி மாவட்டத்துக்கும் திருவெறும்பூர் தொகுதியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இந்த அரசின் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் தொலைநோக்குப் பார்வையுடன் எங்களது செயல்பாடுகள் இருக்கும்” என்றார்.ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2,000 வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக திருச்சி மாவட்டத்தில் 1,226 ரேஷன் கடைகள் மூலம் 8,07,165 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.161.43 கோடி வழங்கப்பட உள்ளது.குறிப்பு தற்போது பெல் நிறுவனத்தில் அமைச்சர் இருவரும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.