தி.மு.க. தலைவர் கலைஞரின் 98 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கழகக் கொடியை ஏற்றி கலைஞர் திருவுருவப் சிலைக்கு மாலை அணிவித்து .மரியாதை செலுத்தினார்கள்.மேலும் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.அதன்பின் அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகரச் செயலாளர அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன், திருவரங்கம் பழனியாண்டி ,மண்ணச்சநல்லூர் கதிரவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்…