துறையூர் நகரில் காற்றில் பறந்த ஊரடங்கு .

0 197
Stalin trichy visit

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் அதிகரித்து வரும் வேளையில் , தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை சற்றும் மதிக்காமல் , துறையூர் நகரில் இரு சக்கர வாகனங்கள் , ஆட்டோக்கள் , கார்கள், டெம்ப்போ வேன் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் அதிகமாக பயணித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகின்றனர். போக்குவரத்து போலீசார் தடுத்து விசாரிக்கும் போது அனைவரும் ஆஸ்பத்திரி , மாத்திரை வாங்குவது என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்துகின்றனர். தீவிரமாக விசாரிக்கையில் அவர்களிடம் மருந்து சீட்டோ , ஆஸ்பத்திரி சீட்டோ இருப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் தான் அதிகமாக ஆண், பெண் என 2 பேர், 3 பேர் என இரு சக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர். ஆட்டோக்கள் மற்றும் வாடகைக் கார்களிலும் அதிகமானோர் பயணித்து வருவது தொற்று பரவலுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. காவல்துறையினர், டாக்டர்கள், செவிலியர்கள் , அரசு அலுவலர்கள், பத்திரிக்கை நிருபர்கள் , நகராட்சி அலுவலர்கள் , முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அடையாள அட்டை கொடுத்து அவர்களுக்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்படும் மற்ற எவருக்கும் பெட்ரோல் கிடையாது என பெட்ரோல் பங்குகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் மட்டுமே அவசியமின்றி சுற்றித் திரியும் நபர்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. துறையூர் நகரில் கட்டுக்கடங்காமல் பொதுமக்கள் வாகனங்களில் சுற்றுவதைப் பார்க்கையில் ஊரடங்கைக் காற்றில் பறக்க விட்டனரோ என்று தோன்றுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.