பறிமுதல் செய்யப்பட்டதில் 279 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு – திருச்சி மாநகர காவல்

0 722
Stalin trichy visit

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள படியால் வாகனங்கள் உரிய ஆவணங்கள் சரிபார்த்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இன்று 09.06.2021 வாகனங்கள் கேகே நகரில் அமைந்துள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஒப்படைப்பட்டு வருவதை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றவும், விரைந்து வாகனங்களை ஒப்படைக்கவும் அறிவுரைகள் வழங்கினார்கள். அதன்படி இன்று ஒப்படைக்கப்பட்ட வாகனங்களின் விவரம் 271 இருசக்கர வாகனங்கள், 7 மூன்று சக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனம், மொத்தம் 279 வாகனங்கள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.