பழிக்கு பழி கத்திக்குத்தில் வாலிபர் பலி – போலீசார் விசாரணை
திருச்சி பாலக்கரையை அடுத்த எடத்தெரு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன்(35)அதே பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இந்தநிலையில் மனிகண்டனுக்கும் ஸ்ரீதர்க்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதில் ஸ்ரீதரை மனிகண்டன் பீர் பாட்டிலால் குத்தி விட்டு தப்பி சென்றார். இது தொடர்பாக பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஸ்ரீதரின் அண்ணன் கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் தங்கமுத்து இணைந்து விரகுபேட்டை அருகே மணிகன்டனை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.
பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்ட உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் தங்கமுத்துவை பாலக்கரை காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.