பிரபாகரன் – சீமான் குறித்து அவதூறு பரப்பியவர் மீது தாக்குதல் : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது

0 729
Stalin trichy visit

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குறித்து, தரக்குறைவாக விமர்சனம் செய்து, திருச்சி கே.கே. நகரில் கார் உதிரிபாகன சேவை நிறுவனம் நடத்தும் வினோத் என்பவர் அவதூறாக மீம்ஸ் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

 

அதையடுத்து, அவரது நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்த, நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சாட்டை துரைமுருகன், திருச்சி மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வினோத் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தோஷ், சரவணன் ஆகியோர் வினோத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் வினோத்தை மிரட்டி, மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகவினோத் கொடுத்த புகாரின்பேரில், நான்கு பேரையும் கே.கே.நகர் போலீசார் iPC 143, 447,153,506 ( 1 ) மற்றும் 506 (2)உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.