பெரியார் – அண்ணா – காமராசர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் லால்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன்
புள்ளம்பாடியில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்.திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 4-வது முறையாக போட்டியிட்டு திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் வெற்றி பெற்றார். இந்நிலையில் லால்குடி அடுத்த புள்ளம்பாடியில் உள்ள அரசியல் தலைவர்களான அண்ணா, காமராஜர்,பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.அப்போது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் படித்த மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும்,தொகுதி தொகுதி முழுவதும் தேவையான அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இந்த அரசு செயல்படும்.அதற்கு உறுதுணையாக இருந்து பாடுபடுவேன் என கூறினார். இந்நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், துணைத் தலைவர் கனகராஜ்,புள்ளம்பாடி நகர செயலாளர் முத்துக்குமார் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள்,மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.