லால்குடி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் சோதனை.
திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், காய்கறி கடைகள், பெட்டி கடைகள், கோழி, மீன், மற்றும் இறைச்சி கடைகளில் வியாபாரிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்து உள்ளனரா,சமூக இடைவெளியை கடைப் பிடிக்கின்றனரா என பேரூராட்சி செயல் அலுவலர் நளாயினி தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.இதில் பல்வேறு வணிக நிறுவன ஊழியர்களும், உரிமையாளர்களும் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் விதித்தனர்.