மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி. லால்குடி போலீசார் விசாரணை.

0 127
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலப்பெருங்காவூர் உடையார் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகன் 24 வயதான தினகர்.இவர் கடந்த 15 ந்தேதி சனிக்கிழமை இரவு 7 மணியளவில் தனது வீட்டின் மாடியில் கட்டியிருந்த டாபர்மேன் நாயை அவிழ்த்துக் கொண்டு கீழே இறங்கியுள்ளார்.கீழே வரும் போது நிலை தடுமாறி மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து விட்டார். இதை கவனித்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தினகரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பலியான தினகரின் உடல் உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.