முழு ஊரடங்கு அமல் : வெறிச்சோடிய திருச்சி மாநகர சாலைகள்

0 203
Stalin trichy visit

கொரோனா 2ம் அலை பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் திருச்சியில் நாளுக்கு நாள் கொரோணா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 800 பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் ஊரடங்கானது இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, டாக்ஸி, ஆட்டோ, பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 940 அரசு பேருந்துகளும், அதே போல 320 தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் திருச்சி மாநகரம் முழுவதும் 860 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.உரிய காரணங்கள் இன்றி வெளியில் சுற்றித் திரியும் நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்.திருச்சி மாநகரில் 8 சோதனை சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.காய்கறிகள் இறைச்சி மீன் விற்பனை கடைகள் குளிர்சாதன வசதியின்றி 12 மணி வரை இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.அனைத்து உணவுகளிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படுகிறது .அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை.ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.