ஸ்ரீரங்கம் கோவில் ஜேஷ்டாபிஷேகம் – கொள்ளிடத்தில் இருந்து புனிதநீர்

0 371
Stalin trichy visit

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆனி மாதத்தில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.

 

தற்போது கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், மேலும் 20 வெள்ளி குடங்களில் கோவில் பணியாளர்கள் மூலம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்பு சக்கரத்தாழ்வார் மற்றும் செங்கமலவல்லி தாயார் சன்னதிகளில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
இதே போல காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார், காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய சன்னதிகளில் ஜேஷ்டாபிஷேகத்தினால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.