முன்னோர்களுக்கு தர்ப்பணம் – அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்
அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்தமிழ் மாதப்பிறப்பு, மகாளய அமாவாசை, மாதந்தோறும் அமாவாசைஎன வருடத்திற்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த அமாவாசை தினத்தில் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதுடன் குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும் என்பது பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
எனவே அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் குறிப்பாக கடற்கரை, ஆறுகளில்,
பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது வாடிக்கை.
அந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
இதில் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கலந்து கொண்டனர் என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
