ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு தரிசன டிக்கெட் மூலம் ஒரு கோடியே 92 லட்சம் வருமானம்

0 396
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்வதற்காக கட்டண சீட்டு மற்றும் ஒரு கோடியே 92 லட்சத்திற்கு விற்பனை – 21 நாள் திருவிழாவில் 14,45,289 பக்தர்கள் சுவாமி தரிசனம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.

21 நாள் மொத்த திருவிழாவில் 14,45,289 பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர் – இதில் அதிகபட்சமாக சொர்கவாசல் அன்று 2.16 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவில் இந்த ஆண்டு மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்வதற்காக கட்டண சீட்டு விற்பனை மட்டும் 1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளது.

இதற்கு முன்னதாக ஸ்ரீரங்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகி இருந்தது – ஒரு கோடியே 92 லட்சம் வரை கட்டண சீட்டு விற்பனை ஆனது இதுவே முதல் முறை.

Leave A Reply

Your email address will not be published.