திருச்சி கோவில்களில் 2 நாட்கள் தரிசனம் ரத்து – ஆடி 18க்கும் அனுமதி இல்லை

0 405
Stalin trichy visit

ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு வெகு விமரிசையாக நடைபெறும் கோயில்ககளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) வரை தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பிரதான கோயில்களில் ஆடி கிருத்திகை தரிசனம், ஆடி பெருக்கு கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் தொடா்பாக முடிவெடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல், சமயபுரம் உள்பட 5 கோயில்களிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகா் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும், பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிா்சோலை முருகன் கோயில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை (ஆக.2) வரும் திங்கள்கிழமையும், ஆடிப் பெருக்கு (ஆக.3) தினம் வரும் செவ்வாய்க்கிழமையும் வருகின்றன. பக்தா்களின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில்,
ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.3) வரை கோயில்களில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

மேலும் திருச்சி காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தா்கள் ஆடி18 முன்னிட்டு புனித நீராடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.