மாணவி கர்ப்பம் : அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது

0 704
Stalin trichy visit

திருச்சி, பிப். 4 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே 14 வயது அரசு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
லால்குடி அருகேயுள்ள அரசுப்பள்ளியில் படித்தும் வரும் 14 வயது அரசு பள்ளி மாணவிக்கு அண்மையில் உடலில் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து அவரது தாய் மாணவியை லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். பரிசோதனையில் மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இது திருச்சி சமூகநலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் பள்ளி மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவி படிக்கும் அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியரான சதீஷ்குமார்(40), மாணவியின் கிராமத்தை சேர்ந்த சத்திரசேகர் (60) ஆகியோர்தான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினாராம். இதையடுத்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று குற்றம் சாட்டப்பட்ட இருவர், சக மாணவிகள் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை செய்தனர். பின்னர் இவர்கள் இருவரும் பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானதையடுத்து அறிவியல் ஆசிரியர் சதீஷ்குமார், பூவாளூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். நீதிபதி இவர்கள் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் காவலில் அடைக்க உத்தரவிட்டதின் பேரில் இவர்கள் இருவரையும் காவல்துறையினர் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்தது போல மாணவிகளை பாதுகாக்க வேண்டிய ஆசிரியரே இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.