சமயபுரம் கோவிலில் தைப்பூச திருவிழாவின் 9ம் நாள் விழா : அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார்

0 33
voc

தைப்பூச திருவிழா – 9ம் திருநாளில் உற்சவர் அம்மன் தெப்பத்தில் முத்து, தாமரை, பவளம் மாலை. ரெட்டை கிளி, வைரம் பதக்கம். தங்க கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.


திருச்சி மாவட்டம்சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா – 9ம் திருநாளில் அம்மன் தெப்பத்தில் முத்து, தாமரை, பவளம் மாலை. ரெட்டை கிளி, வைரம் பதக்கம். தங்க கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், பிரசித்தி பெற்றதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர்.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

இத்திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா கடந்த 26 ஆம் தேதி தங்க கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் உற்சவர் மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

9ம் திருநாளான இன்று சமயபுரம் மாரியம்மன் பவள மாலை, முத்து மாலை, தாமரை மாலை, ரெட்டை கிளி பதக்கம், வைர பதக்கம், தங்க கிரீடம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளி மகா தீபாதாரணைக்கு பின்பு தேரடி வீதி, கடைவீதி வழியாக நான்கு ரோடு பகுதியில் உள்ள தெப்பத்திற்கு அம்மன் வந்தடைந்த
போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து உற்சவர் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து உற்சவர் மாரியம்மன் கடைவீதி, தேரடி வீதி வழியாக கோவிலை சென்றடைந்தது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள்,குருக்கள்கள் செய்திருந்தனர். மேலும் தை தெப்பவிழாவில் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!