திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் இந்திரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் நகுலன்(வயது 56). இவர் தெற்குகாட்டூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அந்த மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் நகுலன் கடையில் திருவெறும்பூர் போலீசார் சோதனையிட்டபோது குட்கா, பான்மசாலவை கைப்பற்றியதோடு திருவெறும்பூர் போலீசார் நகுலனை கைது செய்து, திருச்சி 6வது நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர் நீதிமன்ற

நீதிபதி அனுமதியுடன் வடக்கு காட்டூரில் உள்ள அவரது வீட்டில் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 20 மூட்டை சுமார் 320 கிலோ எடை கொண்ட குட்காவினை திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றியதோடு அவற்றை திருவெறும்பூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதனடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது மனைவி பவானி(47) கைது செய்ததோடு இதுசம்பந்தமாக அவரது மகன் நிபகுகனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.