2வது முறையாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சுழற்கோப்பை விருது!

0 409
Stalin trichy visit

நாட்டின் 75வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நேற்று சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மாநில அளவில் படைவீரர் கொடிநாள் மற்றும் அதிக அளவில் வசூல் செய்து இரண்டாமிடம் பெற்றமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு‌.க ஸ்டாலின் முன்னிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுக்கு சுழல் கோப்பை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

மேலும் இந்த சுழற்கோப்பை விருதினை தொடர்ந்து இரண்டாவது முறையாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.