திருச்சியில் வாலிபரை தாக்கி 2 பவுன் சங்கிலி பறித்த 3 பேர் கைது!
திருச்சி காஜாப்பேட்டையில் வாலிபரை தாக்கி தங்க சங்கிலி பறித்த சென்ற 3 பேரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி காஜாப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா(36). இவர் வீடுகளுக்கு கரையான் மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு காஜாப்பேட்டை பசுமடம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த 4 பேர் செல்லையாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். மேலும், அவரது கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியையும் பறித்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த செல்லையா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அதேபகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (37), ஸ்டீபன்(25), மணிகண்டன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், சங்கிலியுடன் தப்பிய மற்றொரு நபரை தேடி வருகிறார்கள்.