ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி கோட்ட பாதுகாப்பு அணையர் சின்னத்துறை அறிவுரையின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் கொண்ட சிறப்புக்குழு ஹவுராவில் இருந்து திருச்சி வந்த சிறப்பு ரயிலை சோதனை செய்தனர்.
அப்போது மேற்கு வங்காளத்தில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் அதில் வந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல திருச்சி வந்தது தெரியவந்தது. உடனே 3 பேரையும் மீட்டு ரயில்நிலையத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.