சுங்கச்சாவடி கழிவறையில் மின்சாதன பொருட்கள் திருடிய 3 பேர் கைது

0 223
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கழிவறையில் உள்ள மின்சாதன பொருட்கள் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கழிவறை உள்ளது.இந்த கழிவறையில் உள்ள ஒயர் பல்புகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை மூன்று பேர் திருடி உள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மூன்று பேரை பிடித்து தர்ம அடிபோட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் மின்சாதன பொருட்களை திருடிய ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சோகையான் தோப்பு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் 30 வயதான ஜான்சன்டேவிட், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அச்சம்பட்டி தெருவைச் சேர்ந்த கதிரேசன் மகன் 29 வயதான குமார், ஸ்ரீரங்கம் சித்திரை வீதியைச் சேர்ந்த முரளிதரன் மகன் 28 வருட சங்கரன் என தெரியவந்தது. மேலும் காரியாபட்டி காவல் நிலையத்தில் குமார் மீது திருட்டு வழக்கு உள்ளதும், ஜான் டேவிட் சமயபுரம் பழைய பெட்ரோல் பங்க் விற்பனை நிலையம் அருகே நிருத்தியிருந்த லாரியில் டயர் திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் மூன்று பேர்ர் மீதும் வழக்கு பதிவு செய்து சமயபுரம் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.