பைக்கில் பதுக்கிய கஞ்சா பறிமுதல் : 2பேர் கைது

0 269
Stalin trichy visit

முசிறி துறையூர் சாலையில் அயித்தாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனம் ஒன்றில் வாலிபர்கள் வந்தனர். போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்த போது, வாகனத்தில் வந்த முசிறி கூடை முறக்கார தெரு முருகன் மகன் நித்தீசுவரன்( 21) மற்றும் கோவை தென்னம்பாளையம் மோகன் மகன் பார்த்திபன் (20) ஆகிய இருவரும் என்பது தெரியவந்தது. தொடர் விசாரனையில் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்ததுடன் இருவரும் தங்களிடம் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை காட்டி போலீசாரை மிரட்டியதாக கூறபடுகிறது.
இதயடுத்து மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் சுற்றிவளைத்து பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தின் சீட் அடியில் 50 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டனர்.இது குறித்த முசிறி எஸ்ஐ நாகராஜ் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave A Reply

Your email address will not be published.