லஞ்சம்பெற்ற வழக்கில் : தொடக்கக்கல்வி அலுவலர், உதவி கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை

0 297
Stalin trichy visit

உதவி இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு அங்கீகாரம் செய்ய லஞ்சம் கேட்டுப் பெற்ற வழக்கில் கல்விதுறைக்கு கலங்கம் விளைவித்த கருப்பு ஆடுகளான திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு.

திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்டம், கைலாசபுரத்தில் உள்ள BHEL தமிழ் பயிற்றுமொழி நடுநிலைப்பள்ளியில் உதவி இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த குண்டூரை சேர்ந்த திருமதி.ஞானசெல்வி என்பவரது பணி நியமனத்திற்கு அங்கீகாரம் செய்ய கையூட்டு பணம் ரூ.7000/-கேட்டது தொடர்பாக கடந்த 05.08.2002 அன்று .சு.ப.வள்ளியப்பன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், திருச்சி,  கௌரி, நேர்முக உதவியாளர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், திருச்சி, கோவிந்தராஜ், கண்காணிப்பாளர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், திருச்சி மற்றும்  வரதராஜன், உதவி கண்காணிப்பாளர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், திருச்சி ஆகியோர்கள் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.14/2002-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஞானசுந்தரியிடம் கையூட்டு பணம் ரூ.7000/- கேட்டு பெற்றது தொடர்பாக மேற்படி எதிரிகள் 4 பேரும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போது கௌரி, நேர்முக உதவியாளர் மற்றும் கோவிந்தராஜ், கண்காணிப்பாளர் ஆகியோர்கள் இறந்துவிட்டனர். மற்றஇருவர் மீதும் விசாரணை முடிவுற்று இன்று 15.03.2023 திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் , மேற்படி சுப.வள்ளியப்பன், மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் மற்றும் வரதராஜன், உதவி கண்காணிப்பாளர் ஆகியோர்கள் லஞ்ச பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக தலா ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000/-அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக இருவருக்கும் தலா மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் முன்னுதாரணமாக விளங்ககூடிய தொடக்க கல்வி துறையில் மாவட்டத்திற்கு தலைமை விகிக்கும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரே தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு சேர்த்து லஞ்ச பணத்தை கேட்டு கல்வி துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.