கஞ்சா விற்ற 4 பேர் கைது

0 321
Stalin trichy visit

திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி மாரியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது கொத்தமங்கலத்தை சேர்ந்த ருக்மான்(வயது 45), ராம்ஜிநகர் சந்தோஷ்(வயது 26) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா, விற்பனை பணம் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பியோடிய அலமு (என்கிற) அலமேலுவை தேடி வருகின்றனர். அதுபோல் திருச்சி திண்டுக்கல் ரோடு காவேரி நகர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்ற ராம்ஜிநகர் டிஸ்கோ காலனியை சேர்ந்த நித்தியநாதன்(வயது 23), மில் காலனியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(வயது 37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் விற்பனை பணம் ரூ.300 ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.