திருச்சி புத்தூரில் உய்யகொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் இடத்தில் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மாசி மாதம் நடைபெறும் 56 குட்டிக்குடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. நேற்று இரவு காப்பு கட்டுதலுடன் கோயிலில் விழா துவங்கியது.
வரும் 8ம் தேதி காளியவிட்டம், 9ம் தேதி சுத்த பூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் ஆட்டுக்கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றும் குட்டிக் குடி நிகழ்ச்சி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் மரியாதையாக, கலெக்டர் அலுவலகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்படுகிறது.
கிடாரத்தத்தைகோயில் மருளாளி குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திகடனாக பலியிடப்படுகிறது. தொடர்ந்து 11ம் தேதி மஞ்சள் நீராட்டும், 12ம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.