திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் 46 லட்சம் பறிமுதல்
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இன்று ஏர் இந்தியா விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி கொண்டு வந்த கை பையில் செய்தித்தாள்களுக்கு இடையில் மறைத்து வைத்து கொண்டு வந்த 41,800 யூரோ கரன்சியும், 50000 திராம்ஸ் கரன்சிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கரன்சி நோட்டுகள் இந்திய மதிப்பில் 46 லட்சத்து 99 ஆயிரத்து 840 என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது. மேலும் அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.