ரூ.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜன.6 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று(06.01.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் திமு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் திரு.இரா. வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, அ.சவுந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், துணை மேயர் ஜி. திவ்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், மாநகராட்சி நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
