சிறுதானிய உணவு திருவிழா

0 365
Stalin trichy visit

திருச்சி, ஜன.6 திருச்சி கலை யரங்கத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நேற்று சிறுதானிய உணவு திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிய மன அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார், ஜெகதீஸ்வரி, எப்.எஸ்.எஸ்.ஏ,. அலுவலர் சிறப்புரையாற்றினார். முன்னதாக உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் பிரபு வரவேற்புரையாற்றினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, அய்க்கிய நாடுகள் சபை 2023- ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள் ளது. அனைவரும் சிறுதா னிய உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த் துக்கொள்வதால் நீண்ட ஆயுளுடனும், ஆரோக் கியத்துடனும் வாழ முடி யும். இதுகுறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவே இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது; தமிழகத்திலேயே முதன் முறையாக சிறுதானிய உணவு வகைகள் மற் றும் மருத்துவ பயன்கள் குறித்து “சிறுதானிய மருத் துவம்” என்ற தலைப்பில் இணையவழி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை தரவி றக்கம் செய்து அனைவ ரும் படித்து பயன் பெற வேண்டும். உணவுத் திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட தானிய ஸ்டால்கள் அமைக்கப்பட் டிருந்தது. பல்வேறு உணவு தானியங்களான கம்பு கேழ்வரகு, திணை, சாமை, சோளம், குதிரை வாலி போன்ற உணவுப்பொருட் கள் காட்சிப்படுத்தப்பட்டி ருந்தது. விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் பல்வேறு ஸ்டால்கள் அமைத்து விதவிதமாக தானிய உணவுகளை தயா ரித்து வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வசந்தன், பொன்ராஜ். சையத் இப்ராகிம் உள்ளிட்ட அலுவலர் கள் செய்திருந்தனர். உணவுப் பாதுகாப்பு அலுவலர் பாண்டி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.