தக்காளி விலை உயர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பேசும் பொருளாக மாறியுள்ளது. 40 ரூபாய், 50 ரூபாய் என்று படிப்படியாக விலை உயர்ந்து அதிகபட்சமாக 160 ரூபாய் வரை தக்காளியின் விலை சென்றது. திருச்சி காந்தி சந்தையில் கடந்த ஒரு வாரமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, நேற்று 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று இருபது ரூபாய் குறைந்துள்ளது.
தொடர் மழையின் காரணமாகவும் ஆந்திரா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு காரணமாகவும் விலை உயர்வு ஏற்பட்டது என வியாபாரிகள் கூறினர்.
மேலும் நாளை மகாராசா சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தக்காளி இறக்குமதி செய்ய உள்ளதால் மேலும் இதன் விலை குறையும் என்று காந்தி மார்க்கெட் வியாபாரிகள்
சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்காளியின் விலை குறைந்து வரும் அதே நேரத்தில் கத்திரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களிலும் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது. கத்திரிக்காய் கிலோ 140 ரூபாய்க்கு, அவரைக்காய் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.